rahaa.jpg)
மும்பைக்கு எதிரான ஆட்டம்: ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடந்தது.இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக பேட்செய்து 94 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகப் பந்துவீச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டனர். இதனால், ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவுக்கு போட்டு நடுவர் அமைப்பு அபராதம் விதித்துள்ளது.
மும்பைக்கு எதிரான ஆட்டம்: ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
இது குறித்து ஐபிஎல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ''மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்அணிக்கு எதிராகப் பந்துவீச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக்காட்டிலும் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர். இது ஐபிஎல் போட்டி விதிமுறைகளை மீறிய செயலாகும். ஆதலால், அந்த அணியின் கேப்டன் அஜின்கயே ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
Share Share