c anada.jpg)
கனடாவில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு: அழைக்கிறது தமிழீழ அரசாங்கம்
கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வுகளில் பங்குபற்றுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மே 18ஆம் திகதி காலை 11 மணியளவில் கனடாப் பணிமனையில் பொதுச் சுடர் ஏற்றப்படும்.மேலும், கறுத்தப் பட்டி அணிதல், கறுத்த கொடி தொங்க விடுதல் போன்றவற்றை செய்து எம் மண்ணில் விதைக்கப்பட்ட எம் மக்களை நினைவு கூருவோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து தமிழ் மக்களையும் தத்தமது வேலைத்தளத்திலோ, காரியாலயங்களிலோ, வியாபார நிலையங்களிலோ எழுந்து நின்று 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்த வேண்டும்.மேலும், கறுத்தப் பட்டி அணிதல், கறுத்த கொடி தொங்க விடுதல் போன்றவற்றை செய்து எம் மண்ணில் விதைக்கப்பட்ட எம் மக்களை நினைவு கூருவோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது
Share Share